Monday, March 28, 2016

நிலக்கடலையில் நோய் மேலாண்மை குறித்து இலவச பயிற்சி



நாமக்கல்: நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 31 ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் என்.அகிலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 31 ஆம் தேதி காலை 9 மணிக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் விதைகள் மூலம் பரவக்கூடிய நோய்கள், எதிர் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகளைப் பயன்படுத்துதல், விதை நேர்த்தி செய்தல், மருந்து தெளிப்பு முறைகள், பூச்சி மற்றும் நோய்களை கண்டறியும் முறைகள், உயிரியல் முறைகளைப் பயன்படுத்தி பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்துதல், தாவர நூற் புழுக்களை கண்டறிந்து கட்டுப்படுத்துதல் மற்றும் விதைகளை சேமித்து வைத்தல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். 
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345,  266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 30ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் முன்பதிவு செய்யும் 30 நபர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

Source : dinamani

No comments:

Post a Comment