Monday, March 28, 2016

மூன்று மாதம் வரை வாடாமல் இருக்கும் 'ஆர்கிட்' மலர்கள்


கூடலுார், நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மையத்தில் பூத்துள்ள'ஆர்கிட்' மலர்கள், மூன்று மாதங்கள் வரை வாடாமல் இருக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார், நாடுகாணியில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ஜீன்பூல் தாவரவியல் (மரபணு பூங்கா) மையத்தில், பல வகையான தாவரங்கள், அதன், தாவர குடும்பம் வாரியாக, நடவு செய்து, பராமரிக்கப்பட்டு வருகிறது.இதில், ஒரு வாரம் முதல், மூன்று மாதம் வரை வாடாமல் இருக்கும், 70 வகையான,'ஆர்கிட்' மலர்களும், பசுமை குடில்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.அதில், சில செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. இந்த மலர்கள், குறைந்த பட்சம், ஒரு மாதம் முதல்; அதிகபட்சம், மூன்று மாதம் வரையில் வாடாமல் இருக்கும் என, இங்குள்ள நிர்வாகிகள் தெரிவித்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'வரும் கோடை விடுமுறையில், பள்ளி மாணவர்கள், இங்கு வந்தால், ஆர்கிட் மலர் செடிகள் உள்ளிட்ட பல அரிய வகை தாவரங்களை, பார்த்து ரசிப்பதுடன், அவைகள் குறித்த விபரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடியும். அவை எதிர்கால கல்விக்கு உதவியாக இருக்கும்' என்றனர்.


source : dinamalar

No comments:

Post a Comment