Thursday, March 17, 2016

மைசூருவில் ஏப்.22 முதல் வேளாண்தொழில்நுட்ப கண்காட்சி


மைசூருவில் ஏப்.22-ஆம் தேதிமுதல் வேளாண்தொழில்நுட்ப கண்காட்சி நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூருவில் புதன்கிழமை கர்நாடக சிறுதொழில் சங்கத்தலைவர் குரப்பாநாயுடு, செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகம் மட்டுமன்றி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் முக்கியவகிக்கிறது. நாட்டின் 50 சத பேரின் வாழ்வாதாரமாக விவசாயம் இருப்பதோடு, நாட்டின் மொத்த உற்பத்திப்பொருள் விகிதத்திற்கு 13 சதம் பங்களிப்பு அளித்துவருகிறது. ஆனாலும், விளைச்சல்முறை, சேமிப்பு, சரக்கு போக்குவரத்து, விளைபொருள் விநியோகத்தில் விவசாயம் பின் தங்கியுள்ளது.
விவசாயத்துறை வளர்ந்தால் அன்றிவிவசாயிகளின்வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படாது. உணவு பதனிடுதல்துறை ஆரம்பக்கட்டத்தில் இருந்தாலும், ஏராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை குவித்துவைத்துளது. விவசாயமும், விவசாயம்சார் தொழில்துறையும் வளர்ச்சி அடைந்தால் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வேளாண்தொழில்நுட்ப கண்காட்சி நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு பெலகாவியில் நடந்த கண்காட்சி, நிகழாண்டில் ஏப்.22 முதல் 24-ஆம் தேதி வரைமைசூருவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் விவசாயம், கால்நடைபராமரிப்பு, பால்பண்ணை,கோழிவளர்பு, மீன்வளர்ப்பு, உணவு பதனிடுதல், தோட்டக்கலை, மலர்க்கலை, இயந்திரங்கள் தொடர்பான 250 அரங்குகள் இடம்பெற்றிருக்கும். கண்காட்சியையொட்டி கருத்தரங்கங்கள், பயிலரங்கள் நடக்கவிருக்கின்றன. கண்காட்சிக்குகர்நாடக அரசு முழு ஆதரவு அளித்துள்ள்து. மைசூருவில் ஏப்.22-ஆம் தேதி கண்காட்சியை முதல்வர் சித்தராமையாவை தொடக்கிவைக்கிறார் என்றார் அவர். பேட்டியின்போது கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுதாகர் எஸ்.ஷெட்டி உடனிருந்தார்.

Source : Dinamani

No comments:

Post a Comment