கோவையில் யுனைடெட் டிரேடு ஃபேர்ஸ் நிறுவனம் நடத்தும் 3 நாள் வேளாண் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், விதைகள், இடுபொருள்கள், மாற்றுமுறை விவசாயம், மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சார்பில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு வேளாண் கருவிகள் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 20) வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், சூரிய சக்தி மின் மோட்டார்கள், ரசாயனம் இல்லாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் போன்றவற்றை விளக்கும் அரங்குகள் இடம் பெற்றிருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக, ஏற்கெனவே சிறந்த முறையில் தோட்டம் அமைத்து பராமரித்து வருபவர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படுகிறது. மேலும், இந்தக் கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்கு காந்திபுரத்தில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
source : dinamani
No comments:
Post a Comment