பூண்டி ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று. இந்த ஏரியில், மீன் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மீன்கள் வளர்க்க 2012ம் ஆண்டு மத்திய அரசு ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கியது.இந்த நிதியில், மீன்கள் வளர்க்கும் வகையில், முதற்கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பில் 20 தொட்டிகள், ரூ.1.02 கோடி மதிப்பில் மீன்களுக்கான உணவுகள், ரூ.5 லட்சம் மதிப்பில் மீன் குஞ்சுகள் வாங்கப்பட்டு, கடந்த 26.11.2012 அன்று தொட்டிகளில் மீன் வளர்க்கும் திட்டம் துவங்கப்பட்டது.இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் மீன் வளர்ப்பு தொட்டிகள் சேதமானது.
மேலும், தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வந்த 20 டன் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசியதால், அவை அப்புறப்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டன. இதனால், மத்திய அரசு பணம் ரூ.3.25 கோடி வீணானது.இந்நிலையில் மீண்டும் மீன் வளர்ப்பு திட்டத்தை துவக்குவதற்காக, தொட்டிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இப்பணிகள் முடிந்ததும் அதில், மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படும் என மீன் வளர்ப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
source : dinakaran

No comments:
Post a Comment