Wednesday, March 30, 2016

விவசாயிகளின் தேவையே முக்கியம்: கே.வி.கே., ஒருங்கிணைப்பாளர்


 ''விவசாயிகளின் தேவையை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதில், வேளாண் அறிவியல் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது,'' என, அதன் ஒருங்கிணைப்பாளர் அகிலா கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: விவசாயிகளின் தேவையை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்வதில், வேளாண் அறிவியல் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையத்தில், விவசாயிகளுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சின்போது, 30 நபர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதற்கு காரணம், அவர்கள் முழுமையாக பயிற்சியை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. மற்றபடி விவசாயிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் அல்ல. தீவன புல் விதை, காய்கறி விதை, புல் கரணை ஆகியவை, இங்கு பயிற்சி எடுத்தவர்கள், உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து பெற்று வழங்கப்படுகிறது. இங்கு உட்பூசல் என்பது இல்லை. பேராசிரியர்களுக்கும் இருந்தால், விசாரித்து அவற்றை களைய நடவடிக்கை எடுக்கப்படும். பண்பலை வானொலி நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தினமும் மாலை, 5 மணி முதல், இரவு, 7 மணி வரை ஒலிபரப்பப்படுகிறது. மறு ஒலிபரப்பு, பகல், 12 முதல், 2 மணி வரை. அதில் பொறுப்பாளர்களை நியமித்து, விவசாயம், கால்நடைத்துறை மட்டும் அல்லாமல், மற்றத்துறைகள், பொதுத்தகவல்களும் ஒலிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை இன்னும் இரண்டு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

source : dinamalar

No comments:

Post a Comment