பொள்ளாச்சி அருகே பசு மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த குருநல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர், அங்குள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் வளர்த்து வரும் பசு கருத்தரித்திருந்த நிலையில், திங்கள்கிழமை 3 காளைக் கன்றுகளை ஈன்றது. இந்தப் பசுவையும், கன்றுகளையும் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment