Thursday, March 31, 2016

இரண்டு அடி உயரத்தில் குலை தள்ளிய ஆமணக்கு

விவசாயத்தில் நவீன தொழில் நுட்பம் காரணமாக, இரண்டு அடி உயரத்தில் ஆமணக்கு பயிரில் "குலை தள்ளி' மகசூலுக்கு தயாராக உள்ளது.
கிராமப்புறங்களில் கடலை மற்றும் மிளகாய், தக்காளி பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவர். வெப்பத்தை தாங்கி பயிருக்கு நிழல் தருவதாலும், ஆமணக்கு விதைகள் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதாலும் இதை விரும்பி பயிரிடுவர்.
இந்த விதைகளை "கொட்டை முத்து' எனவும் கூறுவர். இந்த பயிரில் இருந்து கிடைக்கும் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், விதைகள் விளக்கெண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது.
இப்பயிர் 8 முதல் 10 அடி வரை வளர்ந்து, படர்ந்து விரிந்து, கிளைகளில் கொத்துக் கொத்தாக காய்க்கும். தற்போது நவீன ரகங்களில், மூன்றே மாதங்களுக்குள் மகசூல் பார்க்கும் அளவில், நவீன ரகங்கள் நடவுக்கு வந்துள்ளன.
சாலையூர் நால்ரோட்டு பகுதியில், ரோட்டோரம் இதை நடவு செய்துள்ளனர். குட்டையான இப்பயிரை அதிசயத்துடன் விவசாயிகள் பார்க்கின்றனர். சாலையூர் நால்ரோடு விவசாயி முத்துச்சாமி: தக்காளி பயிருக்கு நிழலாக இருக்கும் என்பதற்காக, கால்கிலோ ஒட்டுரக விதையை ரூ.150க்கு வாங்கி நடவு செய்தோம்.
இரண்டு அடி உயரத்திலேயே குலை தள்ளி கொத்துக் கொத்தாய் காய்ப்புக்கு வந்துவிட்டது. நல்ல மகசூல் கிடைக்கும் என நம்புகிறேன், என்றார்.


source : dinamalar

No comments:

Post a Comment