கோவை மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயனடையுமாறு விதை ஆய்வுத் துணை இயக்குநர் சுமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காய்கறி விதைகள் மற்றும் மக்காச்சோளம் பயிறு வகை விதைகள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயனடைய வேண்டும். விதை விற்பனை உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். அவ்வாறு விதைகளை வாங்கும்போது, விவசாயிகள் விற்பனைப் பட்டியலை விற்பனையாளரிடம் பெற வேண்டும். விற்பனைப் பட்டியலில் விவசாயியின் முழு முகவரி குறிப்பிட வேண்டும்.
மேலும், பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி நாள் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு விற்பனையாளர் கையொப்பம் மற்றும் விவசாயிகள் கையொப்பமிட்டு வாங்க வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு விதை ஆய்வுத் துணை இயக்குநர், 1424 ஏ, தடாகம் சாலை, ஜி.சி.டி (அஞ்சல்), கோவை-13 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment