தமிழகத்தில் தேனி,திருச்சியில் அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை இலையை அதிகபூச்சிகள் தாக்குவது இல்லை. தற்போது வாழையில் 'ஸ்கிப்பர்' எனப்படும் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகமாக உள்ளது. இலைக்காக விவசாயம் செய்யும் விவசாயிகள் மிகுந்த பிரச்னையை சந்திக்கின்றனர். இப்பூச்சி ஆப்ரிக்காவில் இருந்து ஊடுருவியது.
இந்த அந்து பூச்சியானது வாழையிலையின் பின்புற நுனிப்பகுதியில் குவியலாக முட்டைகளை இடுகிறது. முட்டைகள் ஆரம்பநிலையில் இளஞ்சிவப்பு நிறமாக உள்ளது. முட்டையிலிருந்து வெளிவரும் முதல் நிலை புழுக்கள் இலையினை சிறியதாக சுருட்டி உண்கிறது. இலைச்சுருள் உள்கூட்டுப் புழுவாக மாறுகிறது. புழுவில் இருந்து வரும் அந்துப்பூச்சியின் இறக்கை பழுப்பு நிறத்தில் மஞ்சள்நிற புள்ளியுடன் காணப்படும்.
நன்கு வளர்ந்த புழுக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். பூச்சிகள் பகலில் வாழையிலையின் சருகுகளில் அமர்ந்திருக்கும். புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். காக்கைகள் இப்புழுக்களை விரும்பி உண்பதால் அவற்றுக்கு உணவு வைப்பதன் மூலம் காக்கை நடமாட்டத்தை அதிகரிக்கலாம்.
பறவைகள் தங்கும் குடில்களை அமைத்து புழு, பூச்சி எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் பேசில்லஸ் துரின்ஜியன்ஸ் பாக்டீரியாவை கலந்து தெளித்து புழுக்களை கட்டுப்படுத்தலாம். லிட்டருக்கு 3
சதவீத வேப்ப எண்ணெய் அல்லது 5 சதவீத
வேப்பங்கொட்டை சாறு கலந்து தெளிக்கலாம்.
- சி.சுரேஷ், பூச்சியியல் துறை உதவி
பேராசிரியர், விவசாய கல்லரி, மதுரை.
source : Dinamalar
No comments:
Post a Comment