நாகை வெளிப்பாளையம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வருகிற 30ம் தேதி காலை 9.30 மணி அளவில் சினை மாடுகள் பராமரிப்பு என்ற தலைப்பில் இலவச ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில், சினைமாடுகள் பராமரிப்பு, தீவன மேலாண்மை, சினை மாடுகளில் ஏற்படும் கருப்பை பிரச்னைகள், கருச்சிதைவு போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் 04365 247123 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளும்படி நாகை கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
source : dinakaran
source : dinakaran
No comments:
Post a Comment