திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 2ம் கட்டமாக மண் வள அட்டை வழங்க, மண் மாதிரிகள் ஆய்வு செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
மண்வளத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுதல் , அந்தந்த பகுதி மண்ணின் தன்மை, அதிலுள்ள சத்துக்களின் விவரங்களை அட்டவணைப்படுத்தி, என்ன பயிர் விளைவிக்கலாம் என்பதை குறிக்கும் மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மண்ணின் தன்மைக்கேற்ப உரமிடலாம். அதனால் விளைச்சல் அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தில் மண் மாதிரி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
மத்திய அரசு மண்வள அட்டை திட்டத்தை இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு நடைமுறைப் படுத்த ஆணையிட்டது. இதனடிப்படையில் திண்டுக்கல்லில் இதுவரை 10 ஆயிரத்து 540 மண்மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் மண் வள அட்டை வழங்க உத்தரவிட்டுள்ளதால், 2ம் கட்டமாக மண் பரிசோதனை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு வழங்க பணிகள் வேகமாக நடந்து வருகின்றது.
Source : Dinamalar
No comments:
Post a Comment