தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் அடுமனை (பேக்கரி) பொருள்கள் தயாரிப்பு பயிற்சி மார்ச் 22, 23-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில், ரொட்டி வகைகள், கேக், பிஸ்கெட் தயாரிப்பு, தொழில் தொடங்கும் உரிமம் பெறும் வழிமுறைகள் போன்றவை குறித்து விளக்கமளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ரூ. 1,500 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக் கட்டணத்தை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்துக்கு தபால் மூலமாகவும் அனுப்பலாம். பயிற்சியில் சேர, பதிவு செய்து கொள்ள மார்ச் 22-ஆம் தேதி இறுதி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 0422 - 6611340, 6611268 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment