கரூரில் நடந்த தோட்டப்பயிர் சாகுபடி குறித்து தாந்தோணி வட்டார தோட்டக்கலை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலைய அதிகாரிகள் விவசாயிகள் தற்போதைய சூழ்நிலையில் எப்படி தோட்டப்பயிர் சாகுபடி செய்வது என்பது பற்றி எடுத்துக்கூறி பயிற்சி அளிக்க வந்திருந்தனர். இவர்கள், தாந்தோணி வட்டார தோட்டக்கலை அலுவலர் பேபி, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் முனியாண்டி பயிற்சியை துவக்கி வைத்தனர். தாந்தோணி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சொர்ணமாணிக்கம் விவசாயிகள் மத்தியில் தோட்டக்கலையின் திட்டங்கள் மற்றும் அரசு அறிவிக்கும் மானியங்களை எவ்வாறு பெறுவது என்று விரிவாக பேசினார். தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் கவியரசு, தோட்டப்பயிர்களில் தொழில்நுட்பங்களை புகுத்தி அதிக மகசூல் காண முடியும் என்பது குறித்தும் பேசினார். புழுதேரி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திரவியம், காய்கறிகளில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விரிவாக விளக்கினார்.
Source : dinamalar
No comments:
Post a Comment