கரூர் மாவட்டத்தில் மாலை முதல் மறுநாள் காலை வரை பனி அதிகம் இருப்பதால் விவசாயிகள் பயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் முழுவதும் மாலை 6, மணி முதல் காலை 9, மணி வரை பனி நீடிப்பதால், அதிகமாக மல்லி, சம்பங்கி, கனகாம்பரம் பூக்கள் பயிரிடும் விவசாயிகள் தான் பாதிக்கப்படுகின்றனர். முருங்கை மரத்திலிருக்கும் பூக்கள் கருகி காணப்படுகிறது. இதுதவிர அனைத்து பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் முனியப்பன் கூறியதாவது: பனிக்காலத்தில் அனைத்துப் பயிர்களுக்கு நோய்கள் வருவது இயற்கை தான். அதிகமாக பாதிப்பது பூக்கள் பயிரிடும் விவசாயிகள் தான். ஈரப்பதம் 80, சதவீதத்துக்கும் மேல் அதிகமாகி விட்டால் பயிர்கள் விணாகிவிடும். இதற்காக வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், அனைத்து விவசாயிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை மருந்து மற்றும் சூடாமானோஸ், டிரைகோலாபெரியவரி ஆகிய மருந்துகளைத் பயிர்களின் மேல் தெளித்து விவசாயிகள் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்பதை கற்றுத்தருவதுடன் நேரில் சென்று விளக்கம் அளிக்கிறோம். முக்கியமாக இந்த மருந்துகளை குளிர்காலத்தில் விதை, விதைக்கும் போதே விதையில் கலந்து பயிரிடலாம். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த மருந்துகளை தெளிக்கலாம். பயிர் விளைந்த பின் கூட இந்த மருந்துகளை மருந்து தெளிப்பான் கருவி மூலம் தெளித்து பயிர்களைக் காப்பாற்றலாம். பூக்கள் விடும் பருவத்திலும், பிஞ்சுகள் விடும் பருவத்திலும் பனிக் காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். இதைக்கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை அதிகாரிகளை அணுகினால், தேவையான ஆலோசனைகள் வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment