பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பொ.துறிஞ்சிப்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில், பிப்.17 முதல் 23-ம் தேதி வரை பொ.துறிஞ்சிப்பட்டியில் நாட்டு நலப் பணிகள் திட்ட முகாம் நடைபெறுகிறது. முகாமை ஊராட்சித் தலைவர் உமாபாபு (எ) முருகன் தொடக்கிவைத்தார். பொ.துறிஞ்சிப்பட்டியில் உள்ள பள்ளி வளாகங்கள், கோயில்கள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களை தூய்மை செய்யும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கண் பரிசோதனை, சிறார் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் சிசு கொலை தடுப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்டவை குறித்து சிறப்பு கருத்தரங்குகள் நடைபெற்றன. முகாமில் பள்ளி தலைமை ஆசிரியை த.சாவித்திரி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் தமிழ்தென்றல், உதவி திட்ட அலுவலர் மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment