Monday, February 22, 2016

அதிகளவில் அறுவடை: விவசாயிக்கு பாராட்டு



வீரபாண்டி: சேலம் மாவட்டம் நெய்காரப்பட்டி, புத்தூர் அக்ரஹாரம் வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா, விவசாயி. இவர், தன்னுடைய தோட்டத்தில், ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்யாமல், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் புதுப்புது ரக காய்கறிகளை, சீசனுக்கு ஏற்றபடி பயிர் செய்து, அதிகளவில் அறுவடை செய்து வருகிறார். குறைந்த நிலத்தில், அதிகளவு தக்காளி பழங்களை அறுவடை செய்ததற்காக, கடந்த, 2013ம் ஆண்டு, குஜராத் அரசு சார்பில் நடந்த அகில இந்திய விவசாயிகள் கண்காட்சியில் சிறப்பு பரிசு பெற்றார். இதே போல், கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய சிறிய வெங்காயத்தை, அதிகளவில் சாகுபடி செய்ததோடு, முறையான பயிற்சி பெற்று, வெங்காய விதைகளை உற்பத்தி செய்து, பல விவசாயிகளுக்கு விதை உற்பத்திக்கான பயிற்சியை அளித்தார். இதற்காக, வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், கடந்த மாதம் நடந்த 'உழவர் தின' விழாவில், 'இளம் உழவர் சாதனையாளர்' விருதை ராஜா பெற்றார்.

Source : Dinamalar 

No comments:

Post a Comment