Friday, February 26, 2016

கோழித்தீவனத்தில் அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்



கோழித்தீவனத்தில் அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க ஆரம்பிக்க வேண்டும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆராய்ச்சி நிலையம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 75, 75, 75, 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 36, 36, 36, 36 சதவீதமாகவும் இருக்கும்.

அயற்சி நீக்க மருந்து

அடுத்த 4 நாட்களுக்கும் பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் கோடை வெப்ப அளவுகளை நோக்கி உயரும் என்பதால் குளிர்காலம் முடிவடையும் தருவாயிலும், கோடை ஆரம்பிக்கும் காலகட்டத்திலும் உள்ளது. இரவு வெப்பம் கடந்த வாரத்தை விட அதிகரித்து உள்ளதால் முழுமையாக பனியின் தாக்கம் குறைந்து, காலை வெப்பத்தின் அளவு உயரும். எனவே கோடை காலத்திற்கேற்ப தீவனத்தில் சேர்க்கக்கூடிய அயற்சி நீக்க மருந்துகளை சேர்க்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் கோழிகள் வெப்ப மாற்றத்திற்கு உட்பட்டு அயற்சியடைவதும், முட்டை உற்பத்தி குறைபாடு இன்றியும் காணப்படும்.

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகளில் பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் நோய் மற்றும் வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் அதற்கேற்றார்போல் உயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறும் மற்றும் தெளிப்பான்களை சரிசெய்து தயாராக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Source : Dailythanthi

No comments:

Post a Comment