சொட்டு நீர் பாசனத்திற்கு தோட்டக்கலைத்துறை மூலம் அரசு ஒதுக்கிய மானியங்களை பெற்று விவசாயிகள் பயனடையுமாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஹெட்சோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது: வறட்சியை சமாளிக்கவும், விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் அரசு மூலம் ஆண்டுதோறும் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு நூறு சதவீதமும் , 12.5 ஏக்கர் நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 75 சதவீதமும் மானியமும் வழங்கப்படுகிறது.
ஆண்டிபட்டி பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமான அளவு இருப்பில் உள்ளது. விவசாயிகள் இதனை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும், என்றார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment