கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் 2015- 16ம் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள 100 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆலப்பட்டி, பச்சிகானப்பள்ளி ஆகிய கிராமங்களில் ஊராட்சி ஒன்றியத்தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் முன்னிலையிலும், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் செங்கழநீர்பட்டி கிராமத்தில் ஊத்தங்கரை எம்எல்ஏ முன்னிலையிலும், தளி ஊராட்சி ஒன்றியத்தில் நாட்றாம்பாளையம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பேவநத்தம் கிராமங்களில் ஊராட்சி மன்றத்தலைவர்களால் 5 புதிய கால்நடை கிளை நிலையங்கள் கடந்த 15ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த புதிய கால்நடை கிளை நிலையங்கள் மூலம் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கால்நடை விவசாயிகளும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு டாக்டர். செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran
இவ்வாறு டாக்டர். செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran
No comments:
Post a Comment