Monday, February 22, 2016

திண்டுக்கல்லில் வெண்பட்டுக்கூடு 8.9 லட்சம் உற்பத்தி செய்து சாதனை

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டைவிட, 1.3 லட்சம் அதிகம் வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ரமேஷ் கூறியதாவது: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரம் மாநிலங்களில் அதிகம் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. டில்லியில் உள்ள மத்திய பட்டு வாரியம் பட்டுகளின் தரம், ரகத்தினை நிர்ணயம் செய்கிறது. வெண்பட்டு தான் தொடர்ந்து தரத்தில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் வெண்பட்டு, மஞ்சள் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. வேறு நிற பட்டுகள் உற்பத்தி செய்யவும் பணிகள் நடந்து வருகிறது. 
பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நடவு, மனை மானியம், உபபொருட்களும் வழங்கபடுகிறது. திண்டுக்கல், பழநி, சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெண்பட்டுகூடு உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு முறையான பட்டு வளர்ப்பு, பராமரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கடந்த 2014-15 ம் ஆண்டில், 7.6 லட்சம் வெண்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது.
இந்தாண்டு கடந்த ஆண்டை விட 1.3 லட்சம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் 8.9 லட்சம் வெண்பட்டு கூடுகள் கிடைத்துள்ளது. விவசாயிகள், இளைஞர்கள் பட்டுவளர்ப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவில் நிறைவான வருமானம் பட்டுவளர்ப்பில் பெற முடியும், என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment