Tuesday, February 23, 2016

முயல் வளர்ப்புக்கு நாளை பயிற்சி


ஏனாத்துார், உழவர் பயிற்சி மையத்தில், முயல் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக, உழவர் பயிற்சி மையத்தின் தலைவர் வீரமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், உழவர் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை, முயல் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. கால்நடை பண்ணை தொழில்களில், முயல் வளர்ப்பு லாபகரமான தொழிலாக உள்ளது. பயிற்சியில் பங்குபெற ஆர்வமுள்ளவர்கள், இன்று முதல், 044-27264019 என்ற தொலைபேசியில் பெயர்களை பதிவு செய்யலாம்.


Source : Dinamalar

No comments:

Post a Comment