Tuesday, February 23, 2016

மாந்தோப்பில் ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி


மாந்தோப்பில்,மாஞ்செடிகளுக்கு ஊடாக, கேழ்வரகு பயிரிடப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு மற்றும் தேவலாம்பாபுரம் சுற்றுப்பகுதியில், மலைகள் அதிகம் உள்ளன. மலைச்சரிவுகளில் மாந்தோப்புகள் உள்ளன.மாந்தோப்பில், மாஞ்செடிகள் நடப்பட்டதில் இருந்து, ஐந்து ஆண்டுகளில் பயன்தர துவங்கும். 20 அடி சதுர பரப்பிற்கு ஒரு செடி என்ற அளவில் பயிரிடப்படும். மாஞ்செடிகளுக்கு இடையே உள்ள நிலம், ஐந்து ஆண்டுகளுக்கு வீணாக இருப்பதை விவசாயிகள் விரும்புவது இல்லை.தேவலாம்பாபுரம் பகுதி விவசாயிகள், மாஞ்செடிகளுக்கு இடையே உள்ள பகுதியில் கேழ்வரகு பயிரிட்டு வருகின்றனர். இதனால், மாந்தோப்பில், களை கட்டுப்படுத்தப்படுவதுடன், செடிகளுக்கு முறையான பாசன வசதியும் கிடைக்கிறது.மாஞ்செடிகள் பயன்தர துவங்கும் வரை, ஊடுபயிர் சாகுபடியால், விவசாயிகள் கூடுதல் லாபம் பார்த்து வருகின்றனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment