விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு தொடர்பான கூட்டம், வரும், 26ம் தேதி, வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி
தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விவசாயிகள், ஆட்சியரிடம் முன்வைத்த கோரிக்கைகள்: பழையசீவரம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு தரவேண்டிய, 3.5 கோடி ரூபாய் பாக்கியை தராமல், தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது தாமல் கிராமத்திற்கு, போதிய பேருந்து வசதி இல்லாததால், விவசாயிகள் பலர், காஞ்சிபுரம் வந்து செல்ல சிரமப்படுகின்றனர்
பயிர் காப்பீடு சம்பந்தமாக, காப்பீடு நிறுவனங்களோடு இதுவரை எந்தவிதமான கூட்டமும் நடத்தவில்லைதரகர்கள் மூலம், பல தனியார் தொழிற்சாலைகள், மாவட்டத்தில் உள்ள காடுகளில்,
ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றன
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ அடையாள அட்டை பெற, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், மையம் ஏற்படுத்த வேண்டும்உத்திரமேரூர் கரும்பு விவசாயிகள், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும்.கோரிக்கைகளுக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க, ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும், வரும் 26ம் தேதி, பயிர் காப்பீடு தொடர்பான கூட்டம், இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment