தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மார்ச் 1ம் தேதி தொடங்கி 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் வருகிற மார்ச் மாதம் 10வது சுற்று தடுப்பூசி பணி நடக்க உள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நடைபெறும் 10வது சுற்று தடுப்பூசி முகாமில் தஞ்சை மாவட்டம் முழுவதும் 3.87 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசி குழுவினர் மூலம் தொடர் குளிர் நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போதுள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமை இனங்களை கணக்கிட்டு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும் என தஞ்சை கலெக்டர் சுப்பையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Source : Dinakaran

No comments:
Post a Comment