நாட்டில் உரத்துக்கு அளிக்கப்படும் மானியம் ஆண்டுக்கு ரூ.73,000 கோடி என்ற அளவில் உள்ளது. இதில் பெரும்பகுதி யூரியா உர உற்பத்தியாளர்களுக்கு வழங் கப்படுகிறது. இந்நிலையில், உரத்துக்கு அளிக்கப்படும் மானியம் இனிமேல் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி யமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:
சமையல் காஸ் வாடிக்கை யாளர்களுக்கு நேரடி மானிய திட்டத்தை நாங்கள் அமல் படுத்தினோம். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வெற்றியின் அடிப்படையில் இப்போது உரத்துக்கு அளிக்கப் படும் மானியத்தையும் விவசாயி களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட் டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
இத்திட்டம் சோதனை அடிப்படையில் நாட்டின் சில மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படும்” என்றார்.
இதற்கிடையில் மத்திய உரத் துறை, விவசாயிகளின் விவரங்களை சேகரிக்க தொடங்கி உள்ளது. மேலும், உர விற்பனை விவரங்கள் பெறப்படும். அதன் மூலம் உரத்துக்கான மானியம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
Source : The Hindu
No comments:
Post a Comment