Friday, February 26, 2016

நெல் தரிசில் சாகுபடிக்கு 7,000 கிலோ உளுந்து, பாசிப்பயறு அனுமதி:வேளாண் அதிகாரி தகவல்


கம்பம் வட்டாரத்தில் நெல் தரிசில் சாகுபடி செய்ய உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறு வகைகள் 7,000 கிலோ அனுமதிக்கப்பட்டுள்ளது. கிலோவிற்கு ரூ. 25 மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம்,'' என, வேளாண் உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:கம்பம் பகுதியில் சம்பா பருவ நெல்சாகுபடி அறுவடை நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக கூடலூர், கம்பம், உத்தமபுரம் பகுதிகளில் அறுவடை தீவிரமடைந்துள்ளது. நெல் அறுவடைக்கு பின் நெல் தரிசில் பயிரிட உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்பயறு வேளாண் அலுவலகத்திற்கு வந்துள்ளது. நிலத்தில் ஈரப்பதம் குறைவதற்கு முன்பாக விதைப்பு செய்ய வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு பயறு உற்பத்தி திட்டத்தின் கீழ் உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்பயறு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கம்பம் பகுதிக்கு மட்டும் 7,000 கிலோ வந்துள்ளது. கிலோவிற்கு மானியமாக ரூ. 25 தரப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ விதை வழங்கப்படும்.விதை வாங்கிய பின் விதைப்பு செய்யும் முன் 10 கிலோ விதையுடன் 200 கிராம் ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்ய வேண்டும்.

ஒரு சதுரமீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வறட்சியை தாங்கி வளர 2 சதவீத "டிஏபி' கரைசலை பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும். இதனால் மகசூல் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும். விவசாயிகள் விதைகள் பெறுவதற்கு கம்பம் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Source : Dinakaran

No comments:

Post a Comment