Friday, February 26, 2016

அனக்காவூர் வட்டார கரும்பு விவசாயிகள் கவனத்துக்கு...


கரும்பில் அதிக மகசூல் கிடைக்க ரூ.500 மானியத்துடன் வழங்கப்படும் பெரஸ் சல்பேட்டைப் பெற்று பயன்படுத்த அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனக்காவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரும்பு பயிரில் இரும்புச் சத்து குறைபாட்டின் காரணமாக தற்போது கரும்பு சோகை மஞ்சல் நிறத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாக மகசூல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
எனவே கரும்பில் உள்ள இரும்புச் சத்து குறைபாட்டினை நீக்கும் வகையில், ஹெக்டேருக்கு 100 கிலோ பெரஸ் சல்பேட்டை இட வேண்டும். பெரஸ் சல்பேட் அனக்காவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெரஸ் சல்பேட்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.500 வீதம் மானியம் வழங்கப்படுவதால், கரும்பு விவசாயிகள் இதனைப் பெற்று பயனடையலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Source : dinamani

No comments:

Post a Comment