இயந்திரத்தின் மூலம் விதைக்கப்பட்ட வேர்க்கடலை பயிர், சீரான இடைவெளியில், நன்கு வளர்ந்து, பூ பூக்கும் தருவாயில் உள்ளது.
இயந்திரம் மூலம், விதைத்தல் மற்றும் அறுவடை பணிகளை எளிதாக மேற்கொள்வதால், மீஞ்சூர் ஒன்றியத்தில், பெரும்பாலான விவசாயிகள், நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.இந்தாண்டு, வேர்க்கடலை, பச்சைபயறு, தர்பூசணி உள்ளிட்டவைகளை இயந்திரம் மூலம் விதைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொன்னேரி, சின்னகாவணம் கிராமத்தில், கடந்த ஜனவரி மாதம், இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைக்கப்பட்டது.தற்போது சீரான இடைவெளியில், வேர்க்கடலை செடிகள் நன்கு வளர்ந்து, பூ பூக்கும் தருவாயில் உள்ளன.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:இயந்திரம் மூலம், சீரான இடைவெளியில் விதைக்கப்பட்டதால், நல்ல சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் செடிகள் வளர்கின்றன. களை எடுக்கும் பணி எளிதாக உள்ளது. அடுத்த, 40 நாட்களுக்குள் செடிகள் நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகிவிடும். அடுத்து ஆண்டு கூடுதல் விளைநிலங்களில், இயந்திரம் மூலம் வேர்க்கடலை பயிரிட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
source : Dinamalar
No comments:
Post a Comment