Friday, February 19, 2016

சொட்டு நீர் பாசனத்திற்கு100 சதவீதம் மானியம்


தோட்டப் பயிரிடும் சிறு குறு விவசாயிகள், 100 சதவீத மானியத்தில், சொட்டுநீர் பாசன வசதியை அமைக்க விண்ணப்பிக்கலாம் என, தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.
திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி மற்றும் மலர்கள் பயிரிடுகின்றனர். அந்த விவசாயிகளை ஊக்குவிக்க, சொட்டுநீர் பாசனத்திற்கு தோட்டக்கலை துறை, மானியம் அறிவித்துள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும்; பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் அளிக்கப்படுகிறது.
குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் நிலம் வரை, காய்கறி, மலர் பயிரிடும் விவசாயிகள், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இதுகுறித்து, தோட்டக்கலை துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:காய்கறி, மலர் தோட்டம் அமைக்கும் விவசாயிகளுக்கு, சொட்டுநீர் பாசன வசதி அமைக்க தேவையான அனைத்து கருவிகளையும், 100 மற்றும் 75 சதவீத மானியத்தில் வழங்கவுள்ளோம்.
மானியம்பெற விரும்பும் விவசாயிகள், நிலத்தின் சிட்டா, வரைபடம், ரேஷன் கார்டு மற்றும் இரண்டு புகைப்படங்கள் ஆகியவற்றுடன், மார்ச் மாத இறுதிக்குள், அலுவலக வேலை நாட்களில், நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment