ஏழைகளின் முன்னேற்றம், விவ சாயிகளின் வளர்ச்சி, இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவைதான் பிப்ரவரி 29-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிற 2016-17ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த சின்ஹா கூறியுள்ளார். யூடியுப் (YouTube) மூலம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
``இந்த பட்ஜெட் முன்னேற்ற பாதைக்கான பட்ஜெட். உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வளர்ச்சி தேக்க நிலையிலிருந்து மீண்டு நிலையான வளர்ச்சி அடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்’’ என்று தெரிவித்தார்.
``தேசிய ஜனநாயகக் கூட்டணி பணவீக்கத்தை வெற்றிக்கரமாக கட்டுப்படுத்தி வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் கட்டுப்படுத்தும் வேகம் குறைவாக இருந்தது’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெயந்த் சின்ஹா பதிவிட்டிருந்தார்.
``கூடுதலாக வரி செலுத்துபவர்களுக்கு உதவும் விதமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூடுதலாக வரி செலுத்திய 1.4 கோடி நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு விரைவாக பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கம் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்து வரி செலுத்தும் அனைவருக்கும் கிடைக்குமாறு வழிவகை செய்ய உள்ளது. மேலும் அவர்களைக் கண்டறிந்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் கூடுதலாக செலுத்திய வரி அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
No comments:
Post a Comment