விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர் கூட்டம் வரும் 26-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு, விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்வதுடன், நிலம், பால் தொடர்பான பிரச்னைகள் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைத் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம்.
Source : Dinamani
No comments:
Post a Comment