Monday, February 22, 2016

உயர் தொழில் நுட்ப செயல் விளக்கத்திற்கு 100% மானியம்



திருச்சி: திருச்சி மாவட்டத்தில்  உளுந்து பயிரில் உயர் தொழில் நுட்ப செயல் விளக்கம் அமைக்க 100 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.இது குறித்து திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறுகையில்,தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயறுவகை திட்டத்தின் கீழ், உளுந்து பயிரில் உயர் தொழில் நுட்ப செயல் விளக்கங்கள் 800 எக்டரில் அமைக்க இலக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் செயல்விளக்கம் அமைக்கும் விவசாயிகளுக்கு திரவ வடிவ உயிர் உரங் கள், பயறு நுண்சத்து உரம் ஆகியவை முழு மான்யத்தில் வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.

மேலும் இவ்விவசாயிகளுக்கு டிஏபி 2சதவீத கரைசல் தெளிப்பதற்குரிய 25கிலோ டிஏபி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றுக்கு பின் மான்யமாக எக்டருக்கு ரூ.2,100 வழங்கப்பட உள்ளது. வேளாண் பொறியியல் துறையின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் இருந்து விசை தெளிப் பான்கள் வாங்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.3ஆயிரம் பின் மான்யமாக வழங்கப்பட உள்ளது. இதற்கென 50விசை தெளிப்பான்களுக்கு இலக்கீடுகள் பெறப்பட்டு ள்ளது.

நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் களைக்கொல்லிகள் பயன்பாட்டிற் கென ஒரு எக்டருக்கு ரூ.500பின் மான்யமாக திருச்சி மாவட்டத்தில் 200 எக்டருக்கு வழங் கப்பட உள்ளது. நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் யூரியா 5,993 மெ.டன்னும், டிஏபி 3,837 மெ.டன்னும், பொட்டாஷ் 2,731 மெ.டன்னும் மற்றும் கூட்டுரம் 2,894 மெ.டன்னும் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடை களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment