எலுமிச்சை வகையை சேர்ந்த ஆரஞ்சு பழத்தில், வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. இதயத்துக்கு பயன் தரவல்லது. கொழுப்பு சத்தை கரைக்கும் தன்மை கொண்டது. கண் பிரச்னைகளை சரிசெய்கிறது. புற்றுநோயை தடுக்க கூடியதாக அமைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடையது. ஆரஞ்சு பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.
ஆரஞ்சு பழத்தின் தோலை பயன்படுத்தி முகப்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: ஆரஞ்சு பழத் தோல், தயிர், தேன். பழத் தோலை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது தேன் விட்டு, ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுதால் கரும்புள்ளி மறையும். முகப்பரு சரியாகும். கருவளையம் இல்லாமல் போகும். முகம் பளபளப்பாக இருக்கும். ஆரஞ்சு பழத்தின் தோலை பயன்படுத்தி உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஆரஞ்சு பழத்தோலை நீர்விடாமல் பசையாக அரைக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி வடிக்கட்டி எடுக்கவும். இதை உதடுகளில் தடவினால் வெடிப்பு சரியாகும். மேல்பூச்சாக பயன்படுத்தும்போது சிராய்ப்பு காயங்கள் குணமாகும். உடலில் சோர்வு ஏற்படும்போது ஆரஞ்சு பழச்சாறு குடித்தால் உடனடியாக புத்துணர்வு கிடைக்கும். பழச் சாறுவை பயன்படுத்தி மூட்டு வலி, கை கால் வலி, தசை வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் பழச்சாறு, மிளகுப் பொடி, லவங்கப்பட்டை பொடி, உப்பு. கால் ஸ்பூன் லவங்கப்பட்டை பொடி, 2 சிட்டிகை மிளகுப் பொடி, சிறிது உப்பு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின்னர் ஆரஞ்சு சாறு சேர்க்கவும். இதை குடித்துவர ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பு கரையும். மூட்டு வலி, கை கால் வலி சரியாகும். வயிற்று புண்கள் ஆறும். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் ஏ, இ சத்துக்களும் உள்ளன.
கண்கள், எலும்புகள், தோலுக்கு பயன்தருகிறது. நுண்கிருமி தொற்றுநோய்களை தடுக்கிறது. அடிக்கடி ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். இதில் பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்டவை இருக்கின்றன. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. ஆரஞ்சு சாற்றை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பழச்சாறு, சீரகப் பொடி, தேன். அரை டம்ளர் பழச்சாறுடன் சிறிது சீரகப்பொடி சேக்கவும். தேவையான அளவு வெந்நீர் விட்டு தேன் சேர்க்கவும். இதை சாப்பிட கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். பருவநிலை மாறுதலால் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்றவை வராமல் தடுக்கும். ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யும்.
Source : Dinakaran
No comments:
Post a Comment