கோபி வேளாண் அறிவியல் நிலையம் மூலம், அம்மாபேட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட இராமாச்சிபாளையத்தில் உளுந்து சாகுபடி குறித்து பண்ணைப்பள்ளி செயல் விளக்கம் நடந்தது. அதற்கு பின் சாகுபடி கள நாள் மற்றும் மண் வள அட்டை வழங்கும் விழா நடந்தது. வேளாண் அறிவியல் முதுநிலை விஞ்ஞானி அழகேசன் தலைமை வகித்தார். பயறு வகை பயிர்களில், மகசூல் அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள் குறித்து, உழவியல் விஞ்ஞானி சரவணக்குமார் பேசினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, மண் பரிசோதனை செய்யப்பட்டு, மண் வள அட்டைகள் வழங்கப்பட்டன.
source : Dinamalar
source : Dinamalar
No comments:
Post a Comment