Friday, February 26, 2016

பசுந்தேயிலைக்கு விலையேற்றம் மகிழ்ச்சியில் விவசாயிகள்


நீலகிரியில் உற்பத்தியாகும் பசுந்தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் தோட்டங்களை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தேயிலைக்கான விலையில், நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து, விலையில் முன்னேற்றம் தென்பட்டது. திடீரென பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு, 17 ரூபாய் வரை விலை கிடைத்தது. இந்த விலை நடப்பாண்டு, மேலும் அதிகரிக்க கூடும் என்ற தகவல், வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, மஞ்சூர் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில், தேயிலை தோட்டங்களை பராமரிப்பதில், விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
விவசாயி ரமேஷ் கூறுகையில்,“ கடந்த,15 ஆண்டுகளாக, தேயிலைக்கு போதிய விலை கிடைக்காமல், அனைவரும் அவதியடைந்து வந்த நிலையில், தற்போது, தேயிலைக்கு ஏற்பட்ட கிராக்கியால், தேயிலைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. அதிலும், தரமான இலை கொடுத்தால், மேலும் விலையேற வாய்ப்புள்ளது,” என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment