விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என்று திருச்சியில் நடந்த சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். எம்எல்ஏ பழனிசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை போல தமிழக அரசும் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் இருந்து பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நதிநீர் இணைப்பு திட்டத்தக்கு விரைவாக செயல் திட்டம் அறிவிக்க வேண்டும். முதல் கட்டமாக தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை போர்க்கால நடவடிக்கையாக செயல்படுத்த வேண்டும்.
நீர்நிலைகள், குளம், குட்டை ஆகியவற்றின் வழித்தடங்களை தூர்வாரி ஆக்கிரமிப்பு அகற்றி அந்த பகுதி விவசாயிகளின் துணையுடன் பராமரிக்க வேண்டும். தமிழகத்தில் வனவிலங்குகளால் மனித உயிர் சேதம், பயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்க 1988ம் ஆண்டின் படி உள்ள சட்டத்தை மாற்றியமைத்து பன்றி போன்ற வன விலங்குகளை கொல்ல அனுமதி அளிக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை, விமான நிலைய விரிவாக்கத்துக்கு அரசு நிலம் எடுத்தால் அதற்கு பொது சந்தை விலை கொடுக்க வேண்டும்.
விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடுவதுடன், வீடு இல்லாத விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுத்து நீண்டகால தவணை முறையில் அரசு நிதி வழங்க வேண்டும். காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும்.புதிய வேளாண் கொள்கையை அமல்படுத்தி பயிர்களுக்கு ஏற்ப வாரியங்களை அந்தந்த பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும்.
ஆறுகளில் மணல் எடுப்பதை தடுத்து மாற்று மணல் உபயோகிப்பை அதிகரிக்க வேண்டும். ஆறுகளின் கழிவுநீர் கலப்பதை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது. எரிவாயு குழாய் விளைநிலங்கள் மூலம் பதிப்பதற்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலை ஓரங் களின் வழியாக பதிக்க வேண்டும். தற்போது கெயில் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள அறிவிப்பை பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி மாற்று வழியில் கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டம், தனிநபர் பாதிப்பிற்கு ஈடுசெய்கின்ற வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் ஈரோடு தெய்வசிகாமணி, பொருளாளர் தங்கராசு, பொது செயலாளர் ராமகவுண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Source : Dinakaran

No comments:
Post a Comment