அமெரிக்க விதைகளால் மண் வளம் பாதிக்கப்படுவதாக வெள்ளையன் கூறினார். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரியும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்தும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை டூவீலரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அரியலூரில் இருந்து திருச்சி மாவட்டம் லால்குடி வந்த அவர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
விவசாயத்துக்காக எந்த விதை வாங்கினாலும், அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விதையாக உள்ளது. நமது நாட்டில் விவசாயம் செய்யும்போது அந்த விதை மண்ணில் மலட்டுத்தன்மையை உண்டாக்குகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு உற்பத்தி செலவு கூட கிடைக்கவில்லை.ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
Source : Dinakaran

No comments:
Post a Comment