கடல்
வளங்களை பாதுகாத்ததற்கான விருதுக்கு, பாம்பன் மீனவப் பெண் லட்சுமி தகுதி பெற்றுள்ளார்.
இதற்காக அவருக்கு அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.6½ லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
விருதுக்கு தேர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமாக விளங்கி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் இயற்கையாக விளையும் பல வகை பாசிகள் சேகரிப்பு தொழிலில் ஏராளமான மீனவப் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாயல்குடி அருகே உள்ள வாலி நோக்கம் பகுதியிலிருந்து ராமேசுவரம் வடகாடு வரை உள்ள 25 கிராமத்தைசேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவப் பெண்கள் கூட்டமைப்பாக இந்த பாசி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கடல் வளங்கள் பாதிக்கப்படாமல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாதத்தில் 12 நாட்கள் மட்டும் பாசி சேகரிப்பு தொழிலில் ஈடுபட்டு கடல் வளங்கள் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இந்த கூட்டமைப்பின் தலைவியாக பாம்பன் சின்னப் பாலத்தை சேர்ந்த லட்சுமி உள்ளார்.
இவர் அமெரிக்காவில் உள்ள சீக்காலஜி போர்டு என்ற தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்படும் கடல்வளங்கள் பாதுகாப்பு விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெருமை
இது பற்றி பேடு தொண்டு நிறுவன இயக்குனர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், அமெரிக்காவில் உள்ள சீக்காலஜி போர்டு என்ற தொண்டு நிறுவனம், கடல் வளங்களை பாதுகாத்தல் என்ற பெயரில் ஆண்டு தோறும் ஒரு சிறப்பு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாம்பன் சின்னப் பாலத்தை சேர்ந்த லட்சுமி என்ற மீனவ பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த மீனவப் பெண் ஒருவருக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இது நமது நாட்டிற்கு கிடைத்த பெருமையாகும்” என்றார்.
விருது பெறும் லட்சுமி கூறியதாவது:-
காலை 6 மணிக்கு என்ஜின் பொருத்தப்பட்ட ஒரு நாட்டுப் படகு அல்லது வத்தை என்று சொல்லக் கூடிய துடுப்பு போட்டு செல்லும் படகில் 15 மீனவ பெண்கள், பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு, மனோலி தீவு, வாலை தீவு வரை பாசிசேகரிக்க செல்கின்றோம். கரையோரத்தின் உள்ள பாறைகளில் வளர்ந்திருக்கும் பக்கடா பாசி, கட்டக் கோரை, கஞ்சிப்பாசி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பல வகை பாசிகளை சேகரித்து மதியம் 3 மணிக்கு கரை திரும்புவோம்.
பாசிகளை நன்றாக உலர்த்தி, வியாபாரிகளிடம் கொடுத்து மாதம் தலா ரூ.7 ஆயிரம் வீதம் ஒவ்வொருவருக்கும் வருமானம் கிடைக்கிறது. கடலில் இயற்கையாக விளையும் கடல் பாசிகளை பாது காத்து, கடல் வளங்கள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே பாசி சேகரிக்கச் செல்கிறோம்.
பரிசுத் தொகை
ஒருவித கட்டுப்பாட்டுடன் இந்த தொழிலை நாங்கள் சேர்ந்து செய்து வருகின்றோம். எங்களுக்கு பேடு தொண்டு நிறுவனம் கடனுதவி செய்கிறது. இந்த தொண்டு நிறுவனம் மூலம் கடல் வளங்கள் பாதுகாத்தலுக்கான விருதுக்காக எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 8-ந்தேதி அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதும், 10 ஆயிரம் டாலர் (இந்திய பணத்தில் ரூ.6½ லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்படுகின்றன. இதற்காக தொண்டு நிறுவனங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது உடன் பேடு தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், கடலியல் விஞ்ஞானி முனியாண்டி, ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

http://www.dailythanthi.com/News/Districts/Ramanathapuram/2015/09/02023835/Award-for-protecting-marine-resources-Island-and-the.vpf
No comments:
Post a Comment