Tuesday, September 29, 2015

விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுகள் வினியோகம்



சிவகங்கை : குன்றக்குடி அருகே நேமம் தோட்டக்கலை பண்ணையில் காய்கறி நாற்றுகளை விவசாயிகளுக்கு கலெக்டர் எஸ்.மலர்விழி வழங்கினார். தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நேமம், தேவகோட்டை தோட்டக்கலை பண்ணையில் 47.4 லட்சம் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் 200 எக்டேரில் வீரிய ஒட்டு காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுகள் குழிதட்டுகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது. இதை கலெக்டர் துவக்கி வைத்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் கல்யாணசுந்தரம், உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரன், அழகுமலை, மேலாளர் நிர்மலா ஆகியோர் பங்கேற்றனர்.


http://www.dinamalar.com/district_detail.asp?id=1352859

No comments:

Post a Comment