காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் நிகழ் நிதியாண்டில் நெல் இயந்திர நடவுக்காக ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் ஜெயசுந்தர் கூறினார்.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கரிவேடு கிராமத்தில் கருணாகரன் நிலத்தில் 10 ஏக்கரில் நெல் இயந்திர நடவுப் பணி நடந்தது. இப்பணியை வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெயசுந்தர் நேரில் பார்வையிட்டு, இத்திட்டத்தை ஆயர்பாடி, ஓச்சேரி, தர்மநீதி போன்ற கிராமங்களிலும் முழு அளவில் செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இத்திட்டத்தின் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு அரசு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் நிகழ் நிதியாண்டில் நெல் இயந்திர நடவு செய்ய 700 ஹெக்டேர் நிலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதியுள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுக்கு விவசாயிகள் தங்கள் பெயர் பதிவு செய்து பயன் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார், வேளாண்மை அலுவலர்கள் லீலாவதி, சூரியநாராயணன், சுரேஷ், முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
http://www.dinamani.com/edition_vellore/vellore/2015/09/30/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.-27-%E0%AE%B2%E0%AE%9F/article3054168.ece
No comments:
Post a Comment