Tuesday, September 22, 2015

பட்டு வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு


பட்டு வளர்ப்பு, நூற்பு பயிற்சியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தமிழ்நாடு அரசுப் பட்டு வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மாநில அளவிலான தமிழ்நாடு பட்டு வளர்ச்சி பயிற்சி நிலையத்தின் மூலம் விவசாயிகள், நூற்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் பயிற்சிகள் கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஜவுளித் துறைத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் 2,000 பட்டுப்புழு வளர்ப்பாளர்களுக்கு 5 நாள்கள் பயிற்சியும், 500 பட்டு நூற்பாளர்களுக்கு 15 நாள்கள் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இதில் பங்கேற்க மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்-6 (அலுவலக தொலைபேசி எண்கள் 255318, 257345) என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம்.

http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/09/23/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/article3043099.ece

No comments:

Post a Comment