Tuesday, September 22, 2015

பாரம்பரிய முறையில் நாட்டுக்கோழிகளை அடை வைக்கும், வளர்க்கும் முறைகள்



  இன்று தமிழ்நாடு முழுவதும் நாட்டு கோழி வளர்ப்பு லாபகரமாக உள்ளது. நாட்டுக்கோழி முட்டை, கறிக்கடை, நாட்டுக்கோழி பிரியாணி என்று கடைகள் முளைத்து விட்டன. பலர் இறைச்சி கோழிகளைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள். நாட்டுக்கோழிகள் தொன்று தொட்டு வீடு, காடு, பண்ணைகளில் விவசாய நிலங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.
இதில் சித்து, குருவை, கரிச்சி, கருங்கோழி, பட்டை, போந்தா, செவலை, மயில்கால என்று ஏராளமான வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் குணநலன்கள் வேறுபடும். இவற்றை எப்படி அடை வைப்பது? எப்படி வளர்ப்பது? என்பது ஒரு கலை ஆகும். செம்மண்ணில் அடை வைப்பது சாலச் சிறந்தது. செம்மண்ணில் சிறிது விறகு அடுப்பு சாம்பல் கலப்பது கிருமிகளைத் தடுக்கும். மண்ணில் சிறிய இரும்பு துண்டை புதைத்து வைத்தால் பட்டாசு, இடி போன்ற சப்தங்களை உள்வாங்கி விடும். அடுப்புக்கரி மண்ணின் ஈரப்பதத்தை உறிஞ்சும். இதையும் சிறிது கலக்கலாம்.
காலை 4-6 மணியில் அடை வைக்க வேண்டும். முட்டைக்கு தேவையான 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், 87.5 டிகிரி குறைந்த அளவும் தேவை. 27 நாளில் தாய்க்கோழியின் வெப்பத்தால் குஞ்சு வெளி வரும் அவற்றை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தால் நல்ல விலையில் 3 மாதங்களில் விற்பனை செய்யலாம்.
-
 எம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர், 
93807 55629

gnanam_nidco@yahoo.co.in


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27039&ncat=7

No comments:

Post a Comment