Tuesday, September 29, 2015

காய்கறி உற்பத்தி செய்த 160 பேருக்கு மானியம்



வேலூர்: பந்தல் சாகுபடி மூலம், காய்கறி உற்பத்தி செய்த, 160 பேருக்கு, ரூ. 145 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் நந்தகோபால் கூறினார்.

வேலூர் மாவட்டம், சிறு கறும்பூரில், பந்தல் சாகுபடி மூலம் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதை கலெக்டர் நந்தகோபால் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில், 31 ஆயிரத்து 700 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆற்காடு, வாலாஜா பேட்டை, சோளிங்கர், திமிரி, காவேரிப்பாக்கம், நெமிலி, அரக்கோணம் பகுதியில், இயந்திர நடவு நெற் பயிர் சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. காய்கறி, மலர் சாகுபடி செய்ய, நிழல் வலைக்குடில் அமைக்க, 15 விவசாயிகளுக்கு ரூ 40.10 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் .மீட்டர் பரப்பில் நிழல் வலைக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. பந்தல் சாகுபடி மூலம் காய்கறிகள் உற்பத்தி செய்பவர்களுக்கு, ஒரு ஹெக்டேருக்கு, 50 சதவீதம் என, ரூ 2 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 76.50 ஹெக்டேர் பரப்பில், பந்தல் சாகுபடி மூலம் காய்கறி உற்பத்தி செய்ய, ரூ.145.20 லட்சம், 160 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 http://www.dinamalar.com/district_detail.asp?id=1352926

No comments:

Post a Comment