தமிழ்நாடு
மீன்வள பல்கலை கழகம், மீன்வள கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் மத்திய நன்னீர் நீர்வாழ்
உயிரின வளர்ப்பு நிலையம் ஆகியவை இணைந்து நிலையான மீன்வள உற்பத்தியில் தரமான மீன் குஞ்சுகளின்
முக்கியத்துவம் என்பது பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை தஞ்சையில் இன்று நடத்தியது.
நிகழ்ச்சிக்கு
தமிழ்நாடு மீன்வள பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது
அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டில்
3.7 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு நீர்பரப்பு உள்ளது. அதில் 4.5 லட்சம் டன் வரை மீன் உற்பத்தி
செய்யலாம். ஆனால் தற்போது 87 ஆயிரம் டன் மீன்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதை
அதிகப்படுத்த நபார்டு மானிய உதவியுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்ட மீன் உற்பத்தி அதிக படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கிறது. வேறு எந்த
மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் பண்ணை குட்டை திட்டம் மூலம் மீன் உற்பத்தி
அதிகமாக செய்யப்படுகிறது.
தரமான
மீன்குஞ்சு உற்பத்தி செய்வதன் மூலமும் சினை மீன்களை நல்ல முறையில் பராமரித்தாலும் அதிக
மீன் உற்பத்தி செய்யலாம். இதற்கான ஆராய்ச்சி நிலையம் பவானி சாகர் அணைபகுதியில் அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
வேளாண்மை புரட்சி, வெண்மை புரட்சி நடந்தது போல வருங்காலத்தில் மீன் உற்பத்தியிலும்
பெரும் புரட்சி ஏற்படும். அதற்கு தஞ்சை மாவட்டம் வித்திடும். இந்த முயற்சிக்கு மீன்வள
பல்கலை கழகம் எப்போதும் உதவ தயாராக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment