நன்செய் நிலங்களில் நெல் பயிரிடுவதில் ஆர்வமுள்ள
விவசாயிகள் சேற்று நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி நல்ல மகசூல் ஈட்டலாம் என வேளாண்மைத்
துறை தெரிவித்துள்ளது.
விதையளவு: ஒரு ஹெக்டேர் நடவுக்கு நீண்ட கால ரகம் எனில் 30 கிலோ, மத்திய காலமாயின்
40 கிலோ, குறுகிய கால ரகம் என்றால் 60 கிலோ போதும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கார்பன்டஜிம் அல்லது பைரோகுயிலான் 2 கிராம் அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மி.லி. கலந்து 10 மணி நேரம் ஊறவைத்து வடிகட்ட வேண்டும். இதன் மூலம், இளம் வயதில் பாதிக்கும் தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாள்வரை பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஊறவைத்த விதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோணிச் சாக்கில் கட்டி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளை கட்டியதும் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்கலாம்.
சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கரைசல் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி மேற்சொன்ன முறையில் விதைக்கலாம்.
நாற்றங்கால் தயாரிப்பு: தயாரிக்கப்பட்ட நிலம் 2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செமீ (ஓரடி) இடைவெளியுள்ள வாய்க்கால் பாத்தியைச் சுற்றிலும் அமைக்க வேண்டும். பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரை நிலத்தின் சமன் அமைப்பு, மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைக்கலாம். வாய்க்கால் அமைக்கும்போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம்.
விதைப்பு: முளைகட்டிய விதையை பாத்தியில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு 1 - 2 செமீ அளவு இருத்தல் நல்லது.
நீர் நிர்வாகம்: விதைத்த 24 மணி நேரத்துக்குள் தண்ணீரை வடித்து, விதை முளைக்க சந்தர்ப்பம் தர வேண்டும். தண்ணீர் தேங்காதவாறு பாத்தி அமைப்பும், நீர் நிர்வாகமும் இருக்க வேண்டும்.
விதைத்த 3 முதல் 5 நாள்வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்க்க வேண்டியது அவசியம். நீரின் உயரம் 5 நாளிலிருந்து சிறிது சிறிதாக நாற்றின் வளர்ச்சியைப் பொறுத்து உயர்த்தலாம். அதிகபட்சமாக (ஓரங்குல ஆழம்) நீர் கட்டுவது சாலச் சிறந்தது.
களை நிர்வாகம்: விதைத்த 3 அல்லது 4ஆம் நாளில் களை முளைப்புக்கு முந்தைய களைக்கொல்லி பிரிடில்லாகளோர், சேஃப்பனர் 0.3 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேர் நாற்றுகளுக்குத் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கும் முன்னர் சிறிதளவு தண்ணீர் நிறுத்த வேண்டும்.
தேக்கப்பட்ட நீரை வடிக்கக் கூடாது. தானாகவே மண்ணில் மறைதல் சிறந்தது. விதைத்த 8 நாளுக்குப் பிறகு ஈரப்பதம் இருக்கும் நிலையில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும்.
உர நிர்வாகம்: 20 சென்டுக்கு 1 டன் தொழு உரம், மாட்டு எரு தேவைப்படும். கடைசி உழவின்போது 20 சென்ட் நாற்றங்காலுக்கு 40 கிலோ டிஏபி உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்தோ இட வேண்டும். அடியுரமாக டிஏபி இடுவது குறைவான மண் சத்துள்ள நாற்றங்கால்களுக்கு உகந்தது.
நாற்றுகளை 25 நாள்களுக்குப் பின்னர் எடுத்து நட வேண்டிய நேரங்களில், ரசாயன உரங்களை இட்டு, அதிகபட்சம் 10 நாள்களுக்குள் நாற்றுகள் எடுத்து நட வேண்டும். மிக அதிகமான களிமண் பூமிகளில் நாற்றுகள் எடுக்கும் நேரத்தில் வேர் அழுகும் நிலை ஏற்படின், விதைத்த 10ஆம் நாள் சென்டுக்கு 4 கிலோ ஜிப்சம், 1 கிலோ டிஏபி கலந்து இட வேண்டும்.
புழுதி நாற்றங்கால்: ஆற்றில் தண்ணீர் வருவது பின்தங்கும் தருணத்தில் புழுதி நாற்றங்கால் வரப்பிரசாதமாக அமையலாம். நாற்றங்காலின் பரப்பு, விதை அளவு, விதை நேர்த்தி ஆகியவை சேற்று நாற்றங்காலுக்குக் குறிப்பிட்டதைப்போல பின்பற்ற வேண்டும். நாற்றங்கால் நன்கு உழப்பட்டு 1 முதல் 1.5 மீ அகல பாத்திகளாக அமைக்க வேண்டும். பாத்தியைச் சுற்றிலும் ஓரடி அகல வாய்க்கால் அமைப்பது நல்லது.
களிப்பு அதிகமுள்ள மண் வகைகளில் மேட்டுப்பாத்திகள் அமைக்கலாம். மணற்பாங்கான பகுதிகளில் படுக்கைப் பாத்திகள் போதும்.
நேர்த்தி செய்யப்பட்ட உலர்ந்த விதைகள் தூவப்பட்டு நன்கு மக்கிய மாட்டு அல்லது தொழு உரத்தால் விதைகள் மூடப்பட வேண்டும். மண் நனையும் அளவு நீர் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டும். நான்கு இலைப் பருவம் நடவுக்கு ஏற்றது.
ரசாயன உரமிடுதல்: மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட வேண்டும். இறவை நெற்பயிருக்கு குறிப்பிட்ட வயலுக்கேற்ற உரமிடும் முறை மூலம் மணிச்சத்து, சாம்பல் சத்து இடுவதை நிர்ணயிக்கவேண்டும். மண் பரிசோதனை மூலம் உரங்கள் அளிக்க நேரமில்லையெனில் பொதுவான பரிந்துரைகளைப் பின்பற்றலாம்.
நீர் மேலாண்மை: சேற்று உழவும், உழுது நிலத்தை சமன் செய்தலும், நீரின் தேவையைக் குறைக்கின்றன.
இரும்புச் சக்கரக் கலப்பை மூலம் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20 சதவீதம் வரை தடுக்கப்படுகிறது. வயலில் மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மக்குவதற்கு குறைந்தது ஒரு அங்குல நீர் நிறுத்த வேண்டும்.
குறைவான நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவைகளுக்கு 7 நாளும், அதிகம் நார்த்தன்மையுடைய கொளுஞ்சி இனங்களுக்கு 15 நாளும் நீர் நிறுத்திய பின்னரே நடவேண்டும்.
நடவு செய்யும்போது தண்ணீரின் அளவு, சேறும் சகதியுமாய் இருத்தல் நல்லது. இவ்வாறு அமைந்தால் சரியான ஆழத்தில் நடவும். அதிக தூர் பிடிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கும். நட்ட ஒரு வாரத்துக்கு ஓரங்குல நீர் தேக்கி வைக்கவேண்டும்.
இது தூர் பச்சை பிடிக்கும் காலமானதால் நீர் அளவு குறையாமல் பராமரிக்க வேண்டும். பச்சை பிடித்த பின்பு 2 அங்குல ஆழத்துக்கு நீர் கட்டி, கட்டிய நீர் மறைந்து நூலளவு மண்வெடிப்பு தோன்றும்போது மீண்டும் நீர் கட்டுதல் வேண்டும். இம்முறையில் நீர் கட்டுதல் பயிர் முதிர்ச்சியடையும்வரை கடைப்பிடிக்கவேண்டும்.
அறுவடை: நடவு செய்யப்பட்ட ரகத்தின் வயதைப் பொறுத்து அறுவடை காலத்துக்கு 7 நாள்கள் முன்பாக நீர் தேங்கி நிற்காமல் பாரத்துக்கொள்வது நல்லது. 80 சதம் கதிர்மணிகள் முற்றிய பின்பும்கூட வயலில் பச்சை இலைகளின் தோற்றம் காணப்படும்.
எனவே, கதிர் முதிர்ச்சியடைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். பொதுவாக கதிரின் அடிப்பாகத்தில் உள்ள நெல்மணிகளை கை விரல்களால் அழுத்திப்பார்த்து முதிர்ச்சியை முடிவு செய்யலாம்.
மணிகளை அழுத்தும்போது கடினமாகவும் பால் வெளியில் வராமலும் இருந்தால் அறுவடைக்குத் தயார் என அர்த்தம்.
அறுவடையை 3 நாள் முன்கூட்டி செய்ய வேண்டியநிலை ஏற்படும்போது. சாப்பாட்டு உப்புக்கரைசல் 20 சதவீதம் என்ற அளவில் இலைகளில் தெளித்து 48 மணி நேரத்துக்குப் பின் அறுவடை செய்யலாம்.

· http://www.dinamani.com/agriculture/2015/09/24/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8/article3044146.ece
No comments:
Post a Comment