அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் மானாவாரியாக பயரிடப்பட்டுள்ள பருத்தி, மக்காசோளம் மற்றும் நிலக்கடலை பயிர்களில் மகசூல் இழப்பினை தவிர்த்திட கீழ்க்காணும் வறட்சி மேலாண்மை உத்திகளை கையாள வேண்டும் என அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
உத்தி 1: 2% டிஏபி மற்றும் 1% பொட்டாஷ் கரைசலை ஆரம்ப நிலையில் தெளித்தல், 3% கயோலின் (வெள்ளை களிமண்)கரைசலை பயிர்களின் அனைத்து நிலையிலும் தெளிக்கலாம். சைகோசில் என்ற வளர்ச்சி ஊக்கியினை 500 பி.பி.எம். என்ற அளவில் தெளித்தல், அசோஸ் பைரில்லம் , பாஸ்போ பாக்டீரியம் போன்ற உயிர் உரங்களை ஹெக்டேருக்கு தலா 10 பொட்டலம் வீதம் 25 கிலோ தொழு எருவுடன் கலந்து இட வேண்டும்.
உத்தி 2: மக்காசோளம் விதைக்கும் போது விதைகளை 1 சதம் பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் உரக் கரைசலில் 6 முதல் 8 மணிநேரம் வரை ஊற வைத்து விதைத்தல். பி.பி.எப்.எம் என்ற பாக்டீரியா 1சதம் கரைசலை இலையின் மீது நன்கு நனையும் படி தெளித்தல்.
உத்தி 3: 0.5 % ஜிங்க் சல்பேட், 0.3 % போரிக் அமிலம், 0.5 % இரும்பு சல்பேட், 1 % யூரியா கரைசலினை பயிர்களின் முக்கிய வளர்ச்சி கட்டங்களில் கைத்தெளிப்பான் கொண்டு மாலை 3 மணிக்குப் பின் தெளித்தல் வேண்டும்.
தற்போது பயிரிடப்பட்டுள்ள மக்காசோளம், பருத்தி மற்றும் நிலக்கடலை பயிர்களில் மகசூல் இழப்பினை தவிர்த்திடலாம் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dhinamani
No comments:
Post a Comment