Tuesday, September 22, 2015

நாற்று நடவு செயல் முறை விளக்கம்



காரிமங்கலம்: காரிமங்கலம், கும்பாரஹள்ள பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கொல்லுப்பட்டியில், அட்மா திட்டத்தின் கீழ், நாற்று நடவும் செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி நடந்தது. நாற்று நடும் கருவியை பயன்படுத்தி, நாற்றுகளை நடவு செய்யும் முறை குறித்து, அட்மா திட்ட பணியாளர்கள், இப்பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில், 14 நாள் வயதுடைய, நாற்றானது, பாய் நாற்றங்கால் முறையில் தயாரிக்கப்பட்டு, நன்கு சமப்படுத்தப்பட்ட, நடவு வயலில், கருவிகள் மூலம், 20க்கு 20 என்ற இடைவெளியில், சீராக நடவு செய்வது குறித்தும், குறைந்த நேரத்தில் நாற்றுக்கள் நடவு செய்வதால், 10 நாட்களுக்கு முன்பே, பயிர்கள் அறுவடைக்கு வருவது, அதிக விளைச்சல் பெறுவது குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. இதில், பஞ்சாயத்து தலைவர் லட்சுமி மாது, அட்மா திட்ட பணியாளர்கள் இளவரசி, சேட்டு, பெரியசாமி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment