Tuesday, September 29, 2015

மண்புழு உரம் தயாரிக்கும் பணி மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு



நன்னிலம் பேரூராட்சியில் மண்புழு, திடக்கழிவு மேலாண்மை பணிகள் செயல்பட்டு வருகிறது. அதாவது நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, இதற்கு என இடம் தேர்வு செய்யப்பட்டு, மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை டெல்லியில் இருந்து வந்த மத்திய அரசு செயலாளர் கவுரிசங்கர்ஜா தலைமையிலான 13 அதிகாரிகளை கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மண்புழு தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.மேலும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.25 லட்சம் செலவில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியினையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால், உதவி செயற்பொறியாளர் ராஜா, செயல் அலுவலர் செந்திலன் ஆகியோர் உடன் இருந்தனர். 



http://www.dailythanthi.com/News/Districts/Thiruvarur/2015/09/29021335/Vermi-composting-Federal-government-agencies-Authorities.vpf

No comments:

Post a Comment