Tuesday, September 29, 2015

சிறு தானிய உணவு தயாரிப்பு: மத்திய அரசு 5 நாள் பயிற்சி



சென்னை: சென்னையில் உள்ள, மத்திய அரசின், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம், அக்., 5ம் தேதி, சிறு தானிய உணவு, வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை, கிண்டியில் உள்ள தங்கள் மையத்தில் துவக்குகிறது. 
ஐந்து நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில், தினை லட்டு, இனிப்பு பணியாரம், தோசை மிக்ஸ், வரகு புளியோதரை, சாமை முறுக்கு, சிறு தானிய சத்து மாவு, பாயச மிக்ஸ் வகைகள், வாஷிங் பவுடர், சோப்பு ஆயில், சொட்டு நீலம், ஷாம்பு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அத்துடன், தொழில் துவங்க ஆலோசனை கள், திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கி கடன் வாய்ப்புகள், தரக்கட்டுப்பாடு விவரம், விற்பனை வாய்ப்புகள் குறித்து விவரங்களும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குனர் சிவலிங்கத்தை, 99403 18891 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என,அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment